அரியலூரில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா.! ஒரே நாளில் உச்சத்தை தொட்டது எத்தனை பேர் தெரியுமா.?

இன்று அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது, இதுவரை தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரத்து 58 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், குறிப்பாக சென்னையில் மட்டும் 2008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோயம்பேட்டில் கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளார்கள் அவர்களுக்கு வேகமாக வைரஸ் பரவி இருக்கிறது,

அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு சந்தையில் இருந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் தனது சொந்த ஊரான அரியலூர் வந்துள்ளார்கள், அரியலூருக்கு வந்த ஏராளமான கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது அதில் இன்று மட்டும் ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அரியலூர் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனையடுத்து கொரோநாவல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் அவர்களது குடும்பத்தாரையம் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளார்கள், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக இருந்தது எனவே தற்போதைய ஒரே நாளில் 202 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி விட்டது.

Leave a Comment