தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை அபர்ணா பாலமுரளி. அதன் பிறகு ஜி வி பிரகாஷ் உடன் இணைந்து சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதனை அடுத்து சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் இடம் பிடித்தார் என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்காக நடிகை அபர்ணா தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில ஆண்டுகளில் சினிமாவில் பெரும் இடம் பிடித்த அபர்ணா முரளி ஒரு பேட்டியில் கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நடிகையா அபர்ணா பாலமுரளி அவர்கள் ஒரு பொது இடத்தில் நான் சென்று கொண்டிருந்தபோது தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபர் தன்னிடம் வந்து அபர்ணா நீங்கள் ஏன் குண்டாகி விட்டீர்கள் என்று கேட்டுள்ளார் அது மட்டுமல்லாமல் நன்றாக சாப்பிடுவீங்க போல என அவர் பாணியில் கேலி செய்ததாக அபர்ணா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதன் பிறகு அந்த நபரை அழைத்து என்னுடைய எடை கூறிவிட்டது என்று நீங்கள் ஏன் கூறினீர்கள் இதுபோன்று உடல் தொடர்பு குறித்து யாரிடமும் இதுபோன்று பேசாதீர்கள் என்று அந்த நபரிடம் அபர்ணா அவர்கள் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகும் ஆனால் இன்னமும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என நடிகை அபர்ணா முரளி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.