பெண்ணின் x- ray வை பார்த்து அதிர்ந்து போன மருதுவர்கள்.! நெஞ்சுக்குள் இருந்தது என்ன தெரியுமா.?

0

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்ட ராஜா நகரைச் சேர்ந்த பால்ராஜ் அவருடைய மனைவி மல்லிகா இவர்கள் இருவரும் 25ஆம் தேதி வேறு ஒரு நபருடன் குடும்ப சண்டையில் ஈடுபட்டனர்.அந்த நபர் திடீரென கோபமடைந்து மல்லிகாவை கத்தியால் குத்தி உள்ளார். மல்லிகா சரிந்து அந்த இடத்திலேயே கீழே விழுந்தார் இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் மல்லிகாவை எக்ஸ்ரே செய்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது நெஞ்சுப் பகுதியில் 6 அங்குல அளவிற்கு கத்தி இறங்கி இருந்தது அதில் ஒரு அங்குல கைப்பிடி மட்டுமே வெளியே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் கத்தி இறங்கிய இடத்தில் நுரையீரல் தவிர மீதி எதுவும் பாதிக்கப்படாமல் இருந்தது  மருத்துவர்கள் கண்டுபிடித்தனர் அதன்பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்தக் கத்தியை வெளியே எடுத்தனர்.

இந்த சிகிச்சை கிட்டத்தட்ட 30 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த பெண்ணை மீட்டு எடுத்தனர் மருத்துவர்கள் மேலும் அந்தப் பெண்ணின் நுரையீரல் பகுதியும் சரி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது அந்த மருத்துவர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.