சங்கர் மற்றும் கமலுக்கு அதிரடி ஷாக்!! இந்தியன் 2 திரைப்படத்தை கைவிட்ட லைக்கா நிறுவனம்.! விவரம் இதோ.

shock for Shankar and Kamal !! Lyca company abandons Indian 2 movie: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன். திரைப்படத்தில் சௌந்தர்யா மனிஷா கொய்ராலா செந்தில் கவுண்டமணி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  மேலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது அனைவரும் தெரிந்ததே.

 மேலும் இயக்குனர் சங்கர் 2017 ஆம் ஆண்டு  இந்தியன் 2 படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்குவதாக அறிவிப்பு ஒன்றை விடுத்தார். அவர்கள் திட்டமிட்டது போல் படத்தை சில மாதங்களுக்கு முன்பு  எடுக்க ஆரம்பித்தார்கள். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மூன்று பேர் இறந்தனர். அதன் காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து மீண்டும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அறிவிப்பு வந்தது. மேலும் மார்ச் மாதத்தில் குரானா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மேலும் திட்டமிட்டபடி இந்தியன்-2 படத்தை இயக்க முடியாததால் இந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 திரைப்படத்தை கைவிடும் திட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Comment