அக்னி நட்சத்திரத்திலும் ரசிகர்களை கூல் செய்த சிவானி நாராயணன்.! நேத்து 2 பீஸ் ஆனா இன்னைக்கு வேற லெவல்..

சினிமாவில் சமீப காலமாக தொலைக்காட்சிகளில் நடித்து வரும் நடிகைகள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியல் பக்கம் திரும்புவார்கள் ஆனால் தற்பொழுது சீரியலில் நடித்து சினிமாவில் இடம் பிடிக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை ஷிவானி நாராயணன் இவர் 15 வயதிலேயே நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவரை பார்த்தால் 15 வயது என யாரும் கூற மாட்டார்கள் அந்த அளவு வளர்ந்து 20 வயதுக்கு மேல் இருக்கும் நடிகை போல் இருப்பார்.

இவர் டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமடைந்தார், இதனை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பிக் பாஸ் சீசனில் 98 நாட்கள் வரை வீட்டிற்குள் இருந்து அனைவரையும் ரசிக்க வைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது போல் விக்ரம் திரைப்படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட இந்த காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது. அதேபோல் சமீபத்தில் வடிவேல் நடிப்பில் வெளியாகிய நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் தற்பொழுது சிவானி நாராயணன் பம்பர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எப்பொழுதும் இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி நாராயணன் தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக் போட்டு வருவார்கள்.

shivani narayanan

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கருப்பு நிற பிகினி ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார். அதேபோல் தற்பொழுது வெள்ளை நிற உடையில் இந்த அக்னி நட்சத்திரத்திலும் ரசிகர்களை கூல் செய்து வருகிறார்.

shivani narayanan

Leave a Comment

Exit mobile version