முதல் முறையாக தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி நாராயணன்.! ரெண்டு பெரும் என்னா அழகா.. இருக்காங்க பாருங்கள்.! வைரல் புகைப்படம் இதோ.

பதினெட்டு வயதிலேயே சீரியலில் நடிக்க வந்தவர் ஷிவானி நாராயணன் விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தார் அந்த சீரியலை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற அடுத்தடுத்த சீரியல்களில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிஇருக்கும் போதே திடீரென இன்ஸ்டாகிராம் பக்கம் தாவிய ஷிவானி நாராயணன் அதன் பிறகு சீரியலுக்கு கும்பிடு போட்டு தனது முழு நேர வேளையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்தார். இவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஒரு கட்டத்தில் போகப்போக இவரது புகைப்படங்களை விமர்சிக்க ஆரம்பித்தனர்.

அதிலும் குறிப்பாக அடுத்த சன்னிலியோன், மியா காலிஃபா என இவரை ரசிகர்கள் கமெண்ட்கள் மூலம் பிரித்து எடுத்தனர். இப்படி ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஜய் டிவி பிக் பாஸ் நான்காவது சீசனில்  ஒரு போட்டியாளராக களமிறங்கியது ஆரம்பத்தில் காதல் வயப்பட்டு இருந்த இவரை அவரது அம்மா இடையில் வந்து திட்டித் தீர்த்த பிறகு தனது திறமையைக் காட்டினார்.

கடைசி நேரத்தில் தனது திறமையை வெளிப்படுத்திய மக்களை சம்பாரித்தாலும் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை அவரால் பெற முடியாமல் போனது. வெளியே வந்த அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வெள்ளித்திரையில் மட்டும் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இதனையடுத்து மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசினார்.

இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது படக்குழு அவரை கமிட் செய்து உள்ளது அவரும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஷிவானி நாராயணன் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டு உள்ளார். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

shivani narayanan
shivani narayanan

Leave a Comment