புடவையில் குடும்ப குத்து விளக்காக ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்.! என்ன சிம்ரன் இதல்லாம்

2016-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பகல் நிலவு என்ற சீரியல் மூலம் முதன்முறையாக தொலைக்காட்சி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த சீரியலை தொடர்ந்து சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசனிலும் ராஜா ராணி முதல் சீசனிலும்,  கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடித்து வந்தார்.

அதன்பிறகு ரெட்டை ரோஜா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த சீசனில் ஷிவானி நாராயணன் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

மேலும் இந்த பிக்பாஸ் நான்காவது சீசன் முடிவடைந்த நிலையில் இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பொன்றாம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் ஆர் ஜே பாலாஜி புதிய திரைப்படத்திலும் பம்பர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் வடிவேலு நடித்து வரும் நாயக்கர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ஷிவானி நாராயணனுக்கு குவிந்து வருவதால் விரைவில் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பதினெட்டு வயதில் இருந்தே இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப் படங்களை பதிவேற்றி வருவார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்க்க மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வரும்.

இந்தநிலையில் தற்போது இவர் புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

shivani narayanan
shivani narayanan

Leave a Comment