பாவாடை தாவணியில் துள்ளல் ஆட்டம் போட்ட பகல் நிலவு ஷிவானி.! வைரலாகும் வீடியோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஷிவானி நாராயணன், இவருக்கு வயது 19 தான் இளம் வயதிலேயே சீரியல் கதாநாயகியாக மாறி பெரும் ரசிகர் கூட்டத்தை தன்வசப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கடைக்குட்டி சிங்கம் சீரியலில் இருந்து சில சர்ச்சைகளால் பாதியிலேயே வெளியேறினார் இந்த நிலையில் தற்போது ஷிவானி நாராயணன் இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது உலக நாடுகள் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனால் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாமல் அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பல பிரபலங்களும் வீட்டிலேயே தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பகல் நிலவு சீரியல் நடிகை சிவானி வீட்டிலேயே இருந்தபடி அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார், இந்தநிலையில் சிவானி தற்பொழுது பாலிவுட் படத்தின் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment