அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற ஷிவானி நாராயணன்.! ஆனாலும் ஆட்டம் சூப்பர்

தளபதி நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாடலுக்கு ஷிவானி நாராயணன் நடனமாடி அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளது பெரும் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் மேலும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படத்திலிருந்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது மேலும் யூடியூப்பில் சாதனையும் படைத்துள்ளது.

இந்த நிலையில் அந்த அரபி குத்து பாடலுக்கு பல பிரபலங்கள், நடிகைகள், ரசிகர்கள் என அனைவரும் நடனமாடி அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் யாஷிகா ஆனந்த், வரலட்சுமி சரத்குமார், பூஜா ஹெக்டே, மணிமேகலை  என பல நடிகைகளை கூறிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில் மீண்டும் ஷிவானி நாராயணன் அவர்கள் அரபி குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களிடம் மோசமாக விமர்சங்களை பெற்றது ஒரு சில ரசிகர்கள் திட்டியும் வருகிறார்கள். ஷிவானி நாராயணன் இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்களிலும் ஷிவனி நரயணன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவர் வெளியிட்ட வீடியோ.

https://www.youtube.com/watch?v=bUHG7fWHSJg

Leave a Comment