பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் பாணியில் ரசிகர்களுக்கு மெசேஜ் சொன்ன ஷிவானி.! தலைவி வந்துட்டா இனி தான் தரமான சம்பவம் இருக்கு என கூறும் ரசிகர்கள்.

0

இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக ஒலிபரப்பப்பட்டு வந்தது இந்த நிகழ்ச்சியில் 80 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர் சிவானி அதன் பின்னர் ரோப் டாஸ்க் மூலம் தனது முழு திறமையும் காண்பித்து சிங்கப்பெண்ணாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு சிவானி சமூக வலைதளம் தான் அவருக்கு உலகமே சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் கண்களை குளிர வைப்பார்.  ரசிகர்களும் சிவானி எப்பொழுது போஸ்ட் போடுவார் என தவமாய் தவம் இருப்பார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கால்தடம் பதித்ததிலிருந்து ஷிவானியின் சமூக வலைதள ரசிகர்களே முடங்கினார்கள்.  பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்ற பின்பு ஷிவானியின் வரவேற்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு திடீர் திருப்பமாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களை நீக்கிவிட்டார்.  தற்பொழுது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் டீசன்டான அழகான புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன்பு சிவானி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் டீசண்டான உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ஆல் இஸ் வெல் என்ற மெசேஜை ரசிகர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

நண்பன் திரைப்படத்தில் விஜய் அடிக்கடி பயன்படுத்தும் இந்த வார்த்தையை தற்பொழுது ஷிவானி கூறியுள்ளதால் இந்த மெசேஜ்க்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு பாராட்டி வருகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் சிங்க பெண்ணே என பதிவு செய்து வருகிறார்கள்.  இதெல்லாம் ஒருபுறமிருக்க ஆரியுடன் அடிக்கடி டாச்சில் இருங்கள் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

இதொ அவர் வெளியிட்ட புகைப்படம்.

shivani
shivani