விஜய்க்கே தெரியாமல் விஜய்யை வைத்து சத்தமில்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்த சிவகார்த்திகேயன்.! கேடி பில்லா கில்லாடி ரங்காவாக இருப்பார் போல.!

0

பிரபல விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று தனது பேச்சுத் திறமையினால் தொகுப்பாளராக பணியாற்றி இதன் மூலம் பிரபலமடைந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் இரண்டாம் கட்ட நடிகர்களின் லிஸ்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

தற்பொழுது உள்ள இளைஞர்களை தாண்டி தங்களது மொத்த குடும்பத்துடன் தியேட்டருக்கு போய் பார்ப்பது எந்த நடிகர்களின் திரைப்படங்கள் என்று பார்த்தால் கண்டிப்பாக  சிவகார்த்திகேயனின் திரைப்படம் மட்டும் தான் ஏனென்றால் காமெடி,  செண்டிமெண்ட் அதன் பிறகு சண்டை இது மூன்றும் சரியான அளவிற்கு இருப்பதால் குடும்பத்துடன் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் திரைப்படம் சிறப்பான ஒன்றாக அமைகிறது.

இவ்வாறு பிரபலமடைந்தவர் சிவகார்த்திகேயன் சமீப காலங்களாக சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் கேஎஸ் நிறுவனத்துடன் இணைந்து நெல்சன் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் டாக்டர்.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருப்பதால் இத்திரைப்படம் வெற்றி பெறுவதற்கான அதிக பொறுப்பு உள்ளது. இந்நிலையில் டாக்டர் திரைப்படம் ஹாட்ஸ்டார்  ஓடிடி வழியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தினை நெல்சன் திலிப்குமர் இயக்குவது உறுதியானது.

இதன் காரணமாக சமீப கலங்கலாக சிவகார்த்திகேயன் தளபதியின் திரைப்படத்தை இயக்கி வரும் நெல்சன் திலிப்குமர் தான் டாக்டர் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்று கூறிவருகிறாராம். இதனால் இத்திரைப்படத்தினை அதிக விலைக்கு விற்று உள்ளாராம் எனவே எதிர்பார்த்ததை விடவும் அதிக அளவிற்கு டாக்டர் படத்தை விற்றுள்ளதால் சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் இருந்து வருகிறாராம்.

இந்நிலையில் டாக்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள். அப்பொழுது வெளியாகும் எப்போது வெளியாகும் என்று கூறி  தற்பொழுது ஒரு வழியாக உறுதியான தேதி ஒன்றை அறிவித்து விட்டார்கள்.