தமிழ் திரை உலகில் இளசுகளை போட்டு பாடாய்ப்படுத்திய ஒரு நடிகை என்றால் அது ஷில்பா ஷெட்டி தான். இவர் நடிகர் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தி பக்கம் சென்ற நமது நடிகை முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்து விட்டார்.
மேலும் இவர் தமிழ் ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சினிமாவே வேண்டாம் என ஒரே அடியாக ஒதுங்கிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் போட்டியாக வாழ ஆரம்பித்து விட்டார் இந்நிலையில் அவருக்கு எட்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் ஷில்பாவை பற்றி நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் அவருடைய கணவர் என்ன செய்கிறார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது இந்நிலையில் அவரை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அதாவது ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படங்களை தயாரித்து வினியோகித்த வழக்கில் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளார் ஆம். அதாவது இவர் அந்த படங்களை தயாரித்து அதை மொபைல் ஆப் மூலமாக விநியோகம் செய்து வருவதாக மாட்டிக்கொண்ட குற்றவாளி காவல்துறை அதிகாரியிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதில் முக்கிய குற்றவாளியாக ஷில்பா ஷெட்டியின் கணவர் தான் என கூறப்படுகிறது.
