நடிகர் விவேக்கை பற்றி ஒவ்வொன்றாக புட்டு புட்டு வைத்த காலேஜ் நண்பரும் நடிகருமான ஷிஹான் ஹீசைனி.! வைரல் நியூஸ்.

நடிகர் விவேக் நேற்று 4:45 உயிரிழந்தார் என்ற அறிவிப்பு செய்தி திரைஉலகை  தாண்டி மக்களை வெகுவாக பாதித்துள்ளது.இதனையடுத்து அவரது உடலை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டது இதனையடுத்து சினிமா பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள், மக்கள் என அனைவரும் திரண்டு அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர் பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 78 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

அந்த சூழலில் விவேக்கின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விவேக்கின் சாதனை மற்றும் அவர் செய்த சிறப்புகளைப் பற்றி எடுத்துரைக்கும் வருகின்றனர் அந்த வகையில் கல்லூரி நண்பரும் நடிகருமான ஷிஹான் ஹீசைனி சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பேசியுள்ளார் அவர் கூறியது.

இந்த உலகம் மாபெரும் கலைஞனையும் சமூக சிந்தனை உள்ள ஒருவரை இழந்துள்ளது. நானும் விவேகமும் கல்லூரியில்  இப்படித்தான் ஆனால் என்னை விட ஓராண்டு ஜூனியர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் கவிதாலயா போன்ற மாபெரும் நடிப்பு கல்லூரியில் எங்களது முதல் சந்திப்பே முரட்டுத்தனமாக தான் இருந்தது.

கல்லூரியில் ஒரு தடவை கார்ட்த்தே டெமோ போட்டு அது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது அதை அப்படியே உல்டா பண்ணி கேலியும் கிண்டலுமாக செய்து ரசிகர்களிடையே கைதட்டல் வாங்கினார் ஒருவர்.

அது செய்தது யார் என்ற நபரை நானும் எனது நண்பர்களும் தேடிப் பார்த்தோம் அப்போதுதான் ஒருவன் சிக்கினான் அவனது சட்டையை பிடித்து இழுத்து அவனிடம் கேட்டான் அப்பொழுது கல்லூரி பேராசிரியர்கள் இடையில் வந்து எங்களை தடுத்து நிறுத்தினார்கள் இதனால் அந்த நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது அந்த பையன் என்னை பார்த்து சார் அடிக்கனுமா அடிங்க ஆனா உங்கள டெமோ எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் என்னால உங்கள மாதிரி ஓடு செங்கல் எல்லாம் எடுத்து அடித்து உடைக்க முடியாது அதனால தான் அப்பளத்தை உடைத்தேன் என சிரிச்ச முகத்தோடு பதில் சொன்னார்.

இந்த நாடகம் தொடர்ந்து அனைவரிடத்திலும் கைதட்டு வாங்கியது.அந்த நாடகத்தை நடத்தியவர் வேறு யாருமல்ல நடிகர் விவேக் தான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக் மிகப்பெரிய ஹிட்.இவரது காமெடி நாடகமும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாக கவர்ந்தது எப்பொழுதும் அந்த நாடகத்தை மிஸ் செய்யாமல் பார்ப்பார்கள்.

மேலும் அனைத்து கல்லூரி தமிழ் நாடகப் போட்டி என்றால் இவர்தான் முதலில் அனுப்புவார்கள் அதுபோல ஆங்கில போட்டிகளுக்கு நானும் செல்வேன் நாங்கள் இரண்டு பேரும் பரிசுகளை அள்ளி வருவோம்.

எங்களது நட்பு மிக விரிவாக சென்று நல்ல பழக்கம் ஏற்பட்டது கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் டீ சமோசா சாப்பிட்டு மணிக்கணக்கில் பேசுவோம் இப்படி போய்க் கொண்டிருந்தது.

எங்களுக்கு எதிர்காலத்தில் சினிமாவில் கே பாலச்சந்தர் மூலமாக அறிமுகமாக வேண்டும் என்று ஒரு கனவு இருந்தது முதலில் நான் புன்னகை மன்னன் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனேன். அதே ஆண்டில் விவேகமும் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் பல வருடங்கள் சினிமாவில் நானும் அவனும் வெவ்வேறு படங்களில் பணியாற்றினாலும் ஒருகட்டத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பத்ரி” என்ற திரைப்படத்தில் நானும் அவரும்  இணைந்து நடித்தோம். விவேக் மாபெரும் நகைச்சுவை நடிகர், சமூக போராளி, ஒரு படைப்பாளி எனவும் குறிப்பிட்டார்.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment