கன்னட சினிமாவில் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் முதன்முதலாக 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.. அதனைத் தொடர்ந்து ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில் என தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
என்னதான் தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு தமிழில் கிடைக்கவில்லை இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நண்பேன்டா என்ற திரைப்படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் நான்காவது சீஸனிலும் கெஸ்டாக கலந்துகொண்டார். இந்த நிலையில் ஷெரின் தனது உடல் எடை அதிகமாக இருந்ததால் அதனை குறைத்து நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி வீடியோவை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வெளியிட்டு எப்படியாவது படவாய்ப்பு அடைந்துவிட வேண்டும் என குறிக்கோளுடன் இருந்து வந்தார் ஆனால் இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் மக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், ரஜினி, ராதிகா ஆப்தே என பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் அந்த வகையில் தற்பொழுது நடிகை ஷெரின் தடுப்பூசி போட்டுக் கொண்டதை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் விழிப்புணர்வை ஊட்டும் விதமாக இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது அலையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி.!