சீரியலில் மட்டும்தான் புடவை மற்ற நேரத்தில் அல்ட்ரா மாடர்ன் உடையில் இணையதளத்தை கலக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ஷெரின் ஜானு.! புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

sherin jonu
sherin jonu

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலம் அடையும் வரையில் மட்டும் குடும்ப குத்துவிளக்காக மிகவும் அழகாக நடித்து வருகிறார்கள். ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார்கள் என்றால் அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் இவர்களின் ராஜ்ஜியம்தான்.

பிறகு தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கிவிடுவார்கள். இது சமீப காலங்களாக வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் பாரதிகண்ணம்மா சீரியலில் துளசி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஷெரின் ஜானு.

இவர் ஒரு இந்திய மாடல் ஆவார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சிம்பிளி குஷ்பு என்ற ஷோ மூலம் அறிமுகமானார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் திருமணம் மற்றும் சன் டிவியில் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

இவ்வாறு பிரபலமான இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் 2018ஆம் ஆண்டு வெளிவந்த கூட்டாளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பிரபலமான இவர் தற்பொழுது விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலிலும், ஜீ தமிழில் சித்திரம் பேசுதடி சீரியலிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sherin janu
sherin janu