அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா? ஷெரின் வெளியிட்ட வீடியோ மயங்கிய ரசிகர்கள்

ஷெரின் கன்னடா, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துவரும் நடிகை ஆவார், இவர் தமிழில் முதன்முதலாக துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் 2002ம் ஆண்டு நடித்திருந்தார், அதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு விசில் திரைப்படத்தில் நடித்தார் இந்த இரண்டு திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.

அதன்பிறகு தமிழ் கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் பீமா பூவா தலையா நண்பேன்டா ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆனாலும் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும் பட வாய்ப்பு அமையாததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்பு நீண்ட வருடம் கழித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர், இன்னும் பல ரசிகர்களின் ஃபேவரிட் பாடல் என்றால் அழகிய அசுரா பாடல் இடம் பெற்றிருக்கும்.,

தற்போது பிஸியாக இருக்கும் ஷெரின், மீண்டும் அழகிய அசுரா பாடலுக்கு நடந்து செல்வதுபோல் ஒரு டிக்டாக் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

https://twitter.com/SherinShringar_/status/1215141282999193600

https://twitter.com/SherinShringar_/status/1216365688291414021?s=20

 

Leave a Comment