பிரபல தொலைக்காட்சியின் புதிய சீரியலில் இணைந்த செம்பருத்தி சீரியல் ஷபானா.! வெளியான சீரியலின் புது லுக்..

shabana

பொதுவாக சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளை விட விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இவர்களை நாள்தோறும் பார்ப்பதனால் என்னவோ இவர்களுக்கு என ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மௌசு உருவாக்கி விடுகிறது மேலும் தாங்கள் நடிக்கும் முதல் சீரியலையே பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்து 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1432 எபிசோடுகளை கடந்து சமீபத்தில் கடந்த ஜூலை மாதம் 2022ஆம் ஆண்டு நிறைவடைந்த சீரியல்தான் செம்பருத்தி. இந்த சீரியலில் சபரிநாதன் அவர்கள் கதையில் நாராயணன் மற்றும் தர்மலிங்கம் ஆகியவர்கள் வசனம் எழுதி இருந்தார்கள் இவர்களை தொடர்ந்து ஐந்து இயக்குனர்கள் இந்த சீரியல்களை இயக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் முதலில் கார்த்திக் மற்றும் ஷபானா இருவரும் இணைந்து நடித்த வந்தார்கள்.இவர்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் பிறகு இந்த சீரியலில் நடித்து வந்த கார்த்திக் கதாபாத்திரம் மாற்றப்பட்ட நிலையில் பிறகு அக்னி என்பவர் நடித்த வந்தார்.

இந்த நடிகர் அறிமுகமானதற்கு பிறகு தன்னுடைய மொத்த டிஆர்பியையும் ஜீ தமிழ் இழந்துவிட்டது. மேலும் தற்பொழுது நடிகை ஷபானா செம்பருத்தி சீரியல் நிறைவடைந்ததற்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது இவர் நடிக்க இருக்கும் புதிய சீரியல் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.அதாவது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் jameela என்ற புதிய தொடர் அறிமுகமாக இருக்கிறது.

shabana
shabana

இந்த சீரியலில் ஷபானா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் மேலும் இது குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் அவர் படுதா போட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் இவர் ஷபானா தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.