வாரிசு திரைப்படத்தின் “ஷேர்” மட்டுமே இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீசானது.  முதலில் ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் கலவையான விமர்சனத்தை கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வாரிசு படத்தை கொண்டாடினர் நல்ல விமர்சனத்தையும் கொடுத்ததால் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது இதுவரை மட்டுமே 306 கோடியே ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னமும் ஒரு சில திரையரங்குகளில் ஓடி கொண்டு தான் இருக்கிறது அதேசமயம்  OTT தளத்தில் வாரிசு படம் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. வாரிசை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து  லியோ என்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் முதல் கட்டப்படிப்பு காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படம் போதை பொருளை மையமாக வைத்து படம் நகரும் என சொல்லப்படுகிறது விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம் பல்வேறு இடங்களில் நல்ல வசூல் சாதனை செய்திருந்தாலும் தமிழகத்தில் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது இதுவரை மட்டுமே 177 கோடி அங்கு லாபம் பார்த்துள்ளது. அதில் ஷேர் மட்டுமே சுமார் 77 கோடி கிடைத்திருக்கிறதாம்.  இதனால் வாரிசு படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை

Leave a Comment