இந்தியன் – 2 படத்தை சீக்கிரம் எடுக்க இயக்குனர் ஷங்கர் போட்ட மாஸ்டர் பிளான்..! தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே இப்படி செய்யல..

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் இதுவரை நடித்த பெருமாளான திரைப்படங்கள் வெற்றி படங்கள்தான் இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் கூட மிகப் பிரம்மாண்டமான ஒரு வெற்றி படமாக அமைந்தது அதனை தொடர்ந்து தற்பொழுது கமல் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2 இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது இந்த படத்தை சங்கர் இயக்குகிறார் லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேசன், ஜெயப்பிரகாஷ், வெண்ணிலா கிஷோர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர் இந்த படத்தில் இன்னும் மூன்று முக்கிய இயக்குனர்களும் இணைந்துள்ளனர்.

இந்தியன் 2 படத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து தற்போது பிரபல இயக்குனராக வலம் வந்த வசந்த பாலன், சிம்புதேவன், அறிவழகன் ஆகிய மூவரும் மீண்டும் ஷங்கருடன் இந்தியன் 2 படத்திற்காக இணைந்துள்ளனர்.

ஷங்கருக்கு தற்பொழுது இந்தியன் 2 ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ராம்சரணின் 15 வது படமும் இருக்கிறது இந்த இரண்டு படத்தையும் ஒரே சமயத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளார். அதனால் இந்த மூன்று இயக்குனர்களை வைத்து இந்தியன் 2 படத்தின் காட்சிகளை எடுக்க வைத்து விட்டு கமலுக்கான காட்சிகளில் மட்டும் ஷங்கர் தலை காட்டுவார் மீதி நேரங்களில் சங்கர் ராம்சரண் படத்தை எடுக்க போய்விடுவார் என சொல்லப்படுகிறது.

ஷங்கர் அந்த மூன்று இயக்குனர்களையும் அழைத்து தனித்தனியாக அவர் அவர்களுக்கு ஒரு பகுதி வேலையை கொடுத்து விட்டாராம் அவர்கள் அதை எடுத்துக் காட்டினால் போதும் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.

Leave a Comment