ஷங்கரின் கனவு படத்தில் டாப் ஹீரோக்கள் – 1000 கோடி பட்ஜெட்டை எடுத்துக்கிட்டு எங்க போகப் போறார் தெரியுமா.?

0
shankar-
shankar-

பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் இயக்குனர் ஷங்கர் தமிழில் ரஜினி, விஜய், அர்ஜுன், பிரசாந்த், விக்ரம் போன்ற நடிகர்களை வைத்து சூப்பரான படங்களை கொடுத்தார். இந்த படங்களை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கினார்.

தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங்கில் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததால் ஒரு கட்டத்தில் படம் டிராப்பானது. பொறுமை காத்துக் கொண்டிருந்த ஷங்கர் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் காத்துக்கொண்டிருந்தால் வேஸ்ட் என நினைத்து அடுத்தடுத்த படங்களை இயக்க முனைப்பு காட்டினார்.

அந்த வகையில் தெலுங்கு பக்கம் கால் தடம் பதித்து ராம்சரணை வைத்து  RC 15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் இறுதி கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது இது இப்படி இருக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது கனவு படத்தை எடுக்க திட்டம் போட்டு வருகிறார்.

1000 கோடி பட்ஜெட்டில் நீருக்கு அடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை எடுக்க அவர் நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்து ராம் சரனும் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை எப்பொழுது எடுக்கப் போகிறார் என தெரியவில்லை ஆனால் இந்த படத்தை எடுத்தால் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தான் எடுப்பார் என கூறப்படுகிறது. தற்பொழுது ஷங்கர் கையில் இந்தியன் 2, ராம்சரண் படம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.