தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து தற்போது வரையிலும் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் ஒவ்வொரு திரைப்படத்தையும் எடுத்து வெற்றியை நிலைநாட்டி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள அவர் இயக்குனர் ஷங்கர்.
இவர் எடுக்கும் படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கு மேல் இருந்தாலும் அதைவிட பல மடங்கு லாபத்தை பெற்றுத் தருவதால் தற்போது தமிழை தாண்டி பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன ஆனால் பெருமளவு அவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களை வைத்துதான் இதுவரை படங்களை எடுத்துள்ளார்.
அந்த வகையில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், உலக நாயகன் கமல், அக்ஷன் கிங் அர்ஜுன் போன்ற பிரபலங்களை வைத்து ஹிட் கொடுத்து வந்தார். மேலும் தமிழில் இந்தியன் 2 என்ற படத்தை எடுக்க ஆசைப்பட்டார். தொடர்ந்து பல பிரச்சனை அவர் சந்தார். ஒருகட்டத்தில் அந்த படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு தெலுங்கு பக்கம் முதல் முறையாக அடியெடுத்து வைத்துள்ளார்.
டாப் ஹீரோ ராம் சரணை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். அதன்பிறகு ஹிந்தியில் டாப் ரன்பீர் கபூரை வைத்து அந்நியன் படத்தின் ரீமேக் எடுக்கவுள்ளார். சினிமா உலகில் இயக்குனர் என்ற அந்தஸ்த்தையும் தாண்டி தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து இவரது இளைய மகள் அதிதி ஷங்கர்.
தற்போது கார்த்தியுடன் முதல் முறையாக கைகோர்த்து விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணமானது இப்படி இருக்கின்ற நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா தளபதி விஜயுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
