இந்தியன் 2 வில் ஒரு சில காட்சிகளில் நடித்த விவேக் மீதி காட்சிக்கு ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு.!

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக தனது காமெடி திறமையால் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வந்தவர் சின்ன கலைவாணர் விவேக் இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் தனது ரசிகர்களுக்கு சமூக அக்கறை கொண்ட ஒரு கருத்தை அவர்கள் மனதில் பதியும் அளவிற்கு கூறியிருப்பார்.

இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் அவர் மறைந்தாலும் தற்போதும் விவேக்குடன் பழகிய நண்பர்கள் பலரும் அவருடன் இருந்த புகைப்படங்கள்,வீடியோக்கள் என அனைத்தையும் வெளியிட்டு அவரை ஞாபகப் படுத்தி வருகிறார்கள்.

விவேக் மறைந்தாலும் அவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவானது லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் அதேபோல் அரண்மனை 3 திரைப்படத்தில் கெத்தாக நடித்திருப்பார் என்பதை அரண்மனை3 திரைப்படத்தின் போஸ்டரில் நாம் பார்த்திருக்கலாம் மேலும் பல்வேறு திரைப்படங்களில் விவேக் தனது பட காட்சிகளை முடித்து விட்டுதான் மறைந்தார்.

ஆனால் விவேக் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை அதற்கேற்ப இந்தியன்2 திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து அவரது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் ஆனால் விவேக் இந்த திரைப்படத்தில் மட்டும் பாதி படம் தான் நடித்து முடித்துள்ளாராம்.

indian 2
indian 2

ஆனால் இந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாம் ஆம் இதில் விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது அதனால் பாதி மட்டும் நடித்ததால் அந்த கதாபாத்திரத்தில் தற்போது இளம் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ஒரு சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விவேக் நடித்த பாதி படக்காட்சியை வெளியிடுங்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment