தமிழ் சினிமாவில் விரல் விட்டு என்னும் அளவிற்கு படங்களை எடுத்து இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக தான் இருந்தது. அந்த படங்கள் வெளிவந்து அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை கொடுத்ததால் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தினார்.
இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து தான் தற்போது பிரம்மாண்ட படங்களை எடுக்க பலரும் முடிவெடுத்துள்ளனர் ஆனால் அப்போது காலகட்டத்திலேயே பிரமாண்ட தொகையில் படம் எடுத்து அசத்தி வெற்றி கொண்டவராக இருந்ததால் தற்போது இந்திய அளவில் கவனிக்கப்பட கூடிய இயக்குனர்களில் ஒருவராக சங்கர் விஸ்வரூபம் எடுத்து உள்ளார்.
மேலும் இவரது திரைப்படங்களில் நடிக்க தற்போது டாப் நடிகர்கள் பலரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் இவர் இந்தியன்2 திரைப்படத்தை கமலை வைத்து எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் பூஜை தொடங்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரையிலும் பல தடங்கல்களை சந்தித்து வருவதால் ஷங்கர் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது.
அதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள விரும்பிய ஷங்கர் தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்டு தற்போது இந்தி, தெலுங்கு சினிமா டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்க அதிகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது அந்த வகையில் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க கதைசொல்லி அவரை கமிட் செய்து உள்ளார்.
அவரைத் தொடர்ந்து ஹிந்தியில் டாப் நடிகர் ரன்பீர் கபூரை வைத்து அந்நியன் படத்தின் ரீமேக் எடுக்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரிய வராமல் இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் சங்கர் அவரது பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியான விலை உயர்ந்த காரை தான் சமீப காலமாக பயன்படுத்துகிறார் அந்த வகையில் அவர் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு சுமார் 3.45 கோடி என கூறப்படுகிறது.