இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை திடீரென கேன்சல் செய்த சங்கர்.! இதற்கு இவர்கள் தான் முக்கிய காரணம்…

கடந்த 1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தையும் லஞ்சத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆனால் இந்த படம் தொடங்கியதில் இருந்து சில பிரச்சனையின் காரணமாக ஷூட்டிங் தடைபட்டது அதன் பிறகு மீண்டும் 2020 ஆம் ஆண்டு இந்தியன் 2 முழு வீச்சில் ஷூட்டிங் தொடங்கியது. அதன் பிறகு 2022-ல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த படப்பிடிப்பில் ஷூட்டிங்கில்கிரேன் சரிந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் சங்கரின் உதவி இயக்குனர் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரிய பூகம்பமாக வெடித்தது. இந்தியன் 2 படப்பிடிப்பையும் பாதியில் நிறுத்தியது. இத்துடன் இந்தியன் 2 படப்பிடிப்பு அவ்வளவுதான் என்று பலரும் நினைத்தார்கள் அதுமட்டுமல்லாமல் நடிகர் கமலும் விக்ரம் படத்தில் பிஸியாகிவிட்டார்.

மேலும் விக்ரம் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதும் இந்தியன் 2 பக்கமே செல்ல மாட்டார் என்று பலரும் கூறி வந்தார்கள் ஆனால் விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தியன் 2 இயக்குனர் சங்கர் அவர்கள் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் தொடங்கப்பட்டு வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு திடீரென கேன்சல் செய்ததற்கு என்ன காரணம் என்று பலவிதமாக கேட்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் இந்த நேரத்தில்தான் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பின் போது மூன்று நபர்கள் உயிரிழந்தனர் அதை மனதில் வைத்துக் கொண்டுதான் செண்டிமெண்டாக மூன்று பேர் உயிரிழந்த அன்று ஷூட்டிங்கை வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் சங்கர். இதனால் தான் சங்கர் அவர்கள் ஷூட்டிங்கை கேன்சல் செய்து இருக்கிறார்.

Leave a Comment