தான் இயக்கிய முதல் படத்திலேயே வசூல் சாதனை படைத்த சங்கர்.! எத்தனை கோடி தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர் இயக்குனர் சங்கர் இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே மிக பிரம்மாண்டமான முறையில் தான் வெளியாகும் அந்த வகையில் இவர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியான எந்திரன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் எந்திரன் திரைப்படம் செய்த சாதனையை இதுவரையிலும் எந்த ஒரு திரைப்படமும் செய்ய முடியாமல் திணறி வருகிறது அந்த அளவிற்கு ஒரு பிரம்மாண்ட படைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் சங்கர். இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அது மட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் ராம் சரனை வைத்து ஆர் சி 15 திரைப்படத்தையும் இவர்தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இரண்டு படங்களும் தற்போது முடியும் தருவாயில் உள்ள நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்து காணப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அவர்களின் முதல் படமான ஜென்டில் மென் திரைப்படம் செய்த சாதனையை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். அதாவது சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சங்கருக்கு முதல் படம் என்பதால் இந்த படம் வெளியான பின்பு இந்த திரைப்படம் 24 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமே இந்த திரைப்படம் 17 கோடி வரை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் 3.64 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் படத்திலேயே வசூலில் சாதனை படைத்த சங்கர் அவர்களை பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்வதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று இணையதள வாசிகள் கூறி வருகிறார்கள்..

Leave a Comment