இளம் நடிகையை தட்டி தூக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்.! அடுத்த படத்துல இவங்க தான் ஹீரோயின்

0

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அன்போடு அழைக்கப்படுபவர் இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கும் திரைப்படத்தில் ஏதாவது ஒரு பிரம்மாண்டம் இருக்கவேண்டுமென பிரமாண்டத்தை காட்டி வருகிறார்.

இந்தநிலையில் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஆனால் ஒரு சில பிரச்சினை காரணமாக அந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகயிருக்கும் திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உருவாக இருக்கிறது.  இந்த திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக இயக்கயிருக்கிறார் சங்கர் இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க இருக்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.

ஒருபுறம்  ராம் சரணுக்கு பாலிவுட் பிரபல நடிகையாக இருக்கும் கியரா அத்வானியும் மற்றொரு ராம்சரன் கதாபாத்திரத்திற்கு இளசுகளின் கிரஸ் ராஷ்மிகா மந்தனா அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என  தெரிகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின் நடிப்பதால் ராஷ்மிகா மந்தனா அவர்களின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

rashmika-mandnna
rashmika-mandnna