விஜய் – ஷாருக்கானை வைத்து 900 கோடிக்கு பக்கா பிளான் போட்ட சங்கர்.! அவதார் ஸ்டைலில் உருவாக போகும் மெகா ஹிட் திரைப்படம்…

shankar
shankar

தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர் இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு படத்திற்காகவும் இயக்குனர் சங்கர் கடுமையாக உழைத்து வருகிறாராம்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவை வைத்து வேள்பாரி என்ற நாவலை திரைப்படமாக்க சங்கர் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு பல ஹிட் திரைப்படங்களில் கொடுத்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர் இயக்குனர் சங்கர். இவர் தெலுங்கில் ராம்சரண் மற்றும் கியர அத்வானி நடிப்பில் உருவாகி வரும் ஆர் சி 15 திரைப்படத்தையும் தமிழில் கமல் மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்டோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அவர்கள் ஒரு பிரம்மாண்ட திட்டம் திட்டி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க சங்கர் அவர்கள் பக்க திட்டம் திட்டி வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் சங்கர் அவர்கள் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அவர்கள் நடிகர் விஜய்யையும், ஷாருக்கானையும் வைத்து 900 கோடிக்கு ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படம் அவதார் படம் போல உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்ஓய் ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒரு பிரம்மாண்ட படத்தில் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும் என்றும் கூறப்படுகிறது.