லோகேஷ்க்கு ஆட்டம் காட்ட களத்தில் குதித்த சங்கர்.! இனி தான் இருக்கு ஆட்டமே…

தென்னிந்திய சினிமாவில் தோல்வியே கண்டிடாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவருக்கு முன்னாடியே ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவில் தோல்வியை கண்டிடாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர்தான் இயக்குனர் சங்கர். இவரை பலரும் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைத்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் சங்கர் அவர்கள் தற்போது இந்தியன் 2 மற்றும் rc 15 ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கமல்ஹாசன், காஜல் அகர்வால், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் சங்கர் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில் ஓராண்டுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு ஒரு சில பிரச்சனையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சங்கடங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது அதன் பிறகு கொரோனாவின் பாதிப்பால் தள்ளிப்போனது.

இப்படி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வந்த சங்கர் அவர்கள் சமீப காலங்களாக இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கி வருகிறார். இந்த நிலையில் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் 30 நாட்கள் சென்னையில் படமாக்கப்பட உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருப்பதாக இயக்குனர் சங்கர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது அமைக்கப்பட்ட செட் இருக்கும் இடத்தில் சங்கர் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்தியன் 2 ஈஸ் பேக் என்று கூறப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment