மிகப்பெரிய பட்ஜெட்டில் தனது அடுத்த திரைப்படத்தை எடுக்க தயாராகும் ஷங்கர்.! அதுவும் யாருடன் தெரியுமா இதோ புகைப்படத்துடன் பாருங்கள்.

0

என்னதான் தமிழ் திரையுலகில் நிறைய இயக்குனர்கள் போட்டி போட்டு வந்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர் இவரது கைவண்ணத்தில் உருவான பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

சாதாரணமாக லோ பட்ஜெட்டில் படம் எடுக்காமல் தனது திரைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் மிகவும் அதிகமான பட்ஜெட் போட்டு எடுக்கும் இயக்குனர் என்றால் அது இவர்தான்.

அவ்வாறு இவர் இயக்கும் எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் இவரது கைவண்ணத்தில் உருவான பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை தந்துவிட்டது மேலும் இவர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரனை வைத்து ஒரு திரைப்படம் இயக்கப் போகிறார் என்பது பற்றி எப்போதே ஒரு தகவல் வெளியானதை நாம் பார்த்திருப்போம் ஆனால் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது இது சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக சென்னையில் உள்ள ஷங்கர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

ram saran
ram saran

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷங்கர் இயக்கும் திரைப்படம் உறுதி செய்யப்பட்டு விட்டது இனிமேல் படம் எப்போது வெளியாகும் என்பதை மட்டும் தான் பார்க்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.