விவேக்கின் கடைசி ஆசையை பஸ்பமாக்கும் ஷங்கர்.! உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விவேக் இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார் அதுமட்டுமல்லாமல் இவர் பல சமுக சேவைகளையும் செய்து வந்தார். இதனிடையே நடிகர் விவேக் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்திருப்பது சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது அது மட்டுமல்லாமல் சினிமாவிற்கு பேர் இழப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லெஜெண்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நடிகர் விவேக்கின் கடைசி படம் என்பதால் பல ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க சென்றனர். இதனை தொடர்ந்து நடிகர்கள் விவேக் மேலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வந்தார்.

அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் சில காட்சிகள் நடிகர் விவேக் அவர்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் நடிகர் விவேக் அவர்கள் நடித்த காட்சிகளை தற்போது சங்கர் அவர்கள் நீக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் விவேக்கின் கடைசி படமான லெஜன்ட் திரைப்படம் வெற்றி பெறாமல் போனதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

ஆகையால் இந்த படம் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் தற்போது சங்கர் அவர்கள் நடிகர் விவேக் அவர்கள் இறந்ததால் அவருடைய காட்சியை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment