வயது காரணத்தால் ஷங்கரின் பாய்ஸ், சுப்பிரமணியபுரம் என பல திரைப்படங்களை தவறவிட்ட வாரிசு நடிகர்.! வட போச்சே என புலம்பும் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் வாரிசு நடிகர்கள் கால் தடம் பதித்து முன்னேறி வருகிறார்கள், வாரிசு நடிகர்களால் பல இளம் நடிகர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் கூட சுஷாந்த் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு நடிகராக இருப்பவர் சாந்தனு பாக்கியராஜ், இவர் தீவிர விஜய்யின் ரசிகர் ஆவார், தற்போது இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சாந்தனு பாக்கியராஜ் மற்றும் அவரின் மனைவி கிகி  இருவரும் இணைந்து நடன ஸ்டுடயோ ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் அதில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள், இந்தநிலையில் சாந்தனு பாக்கியராஜ் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

ஊரடங்கும் முடிந்ததும் திரையரங்கில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, சாந்தனு பாக்கியராஜ் சிறுவயதிலேயே பல திரைப்படங்களை தவறவிட்டு உள்ளார், இதனை அவரின் அப்பா பாக்கியராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதிலும் முக்கியமாக ஷங்கரின் திரைப்படத்தை தவறவிட்டு உள்ளார்.

வயது காரணமாக ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை என கூறியுள்ளார் பாக்கியராஜ், அதுமட்டுமல்லாமல் பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படத்திலும் முதலில் நடிக்க வேண்டியது சாந்தனு பாக்யராஜ் தான். அதுமட்டுமில்லாமல் சசிகுமாரின் சுப்பிரமணியம் திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் தவிர்த்துள்ளார் சாந்தனு பாக்கியராஜ்.

இதில் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் தான் நடிக்க முடியவில்லை. இந்த திரைப்படங்களில் சாந்தனு பாக்யராஜ் நடித்து இருந்தாள் அவரின் திரைப்பயணம் வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கும், ஆனால் இன்று வரை வளரும் நடிகராகவே இருந்துவருகிறார் சாந்தனு பாக்கியராஜ்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment