தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து தனக்கான மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் அதற்கு முக்கிய காரணம் நயன்தாராவின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி தான்.
இப்படி சினிமா ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வந்தனர். இதனிடையே இவர்களது திருமணத்தை பலரும் எதிர்பார்த்து.
வந்த நிலையில் இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணத்திற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன் போன்ற முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கல்யாணத்தில் ஷாருக்கான், அட்லி, ரஜினி, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, சூர்யா, கார்த்தி, போன்ற பலரும் கலந்து கொண்டனர்.
இவர்களது திருமணத்திற்காக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா 18,000 ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் கோவில்கள் என கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நடிகர் அஜித் வருவாரு என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த திருமணத்திற்கு அஜித் வரவில்லை.
ஆனால் அஜித் குடும்பத்திலிருந்து ஷாலினி, ஷாமிலி, ஆத்விக் அனோஷ்கா போன்றவர்கள் கலந்து கொண்டனர் அப்போது அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி பாலிவுட் டாப் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
