பொங்கல் தினத்தில் தாவணி பாவாடையில் சாமி சாமி என்ற புஷ்பா பாடலுக்கு மரண குத்து குத்தும் ஷாலு ஷம்மு.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக களம் இறங்கியவர் ஷாலு ஷம்மு இவர் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு காதலியாக நடித்திருந்தார் இதனைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ரெக்க, திருட்டுப்பயலே இரண்டாவது பாகம் இரண்டாம் குத்து, ராயர் பரம்பரை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் 2019ஆம் ஆண்டு ஆண் நபருடன் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அது மட்டுமில்லாமல் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக பெரிய வைரலானது மேலும் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட ஷாலு இதுபோல் அதிகமாக வீடியோவை பதிவிட்டுள்ளார்.

பொங்கல் தின சிறப்பு நாளான நேற்று பல நடிகைகள் தங்களுடைய பொங்கல் தினத்தை கொண்டாடி அதன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்கள் அதேபோல் நடிகை ஷாலு ஷம்மு அவர்களும் பொங்கல் வைப்பது போல் போஸ் கொடுத்தே புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வந்தது இந்த நிலையில் மேலும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் புஷ்பா இந்த திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி வருகின்றது அதுமட்டுமில்லாமல் படமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சாமி சாமி பாடலுக்கு பல நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் ரீல் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

அதேபோல் நடிகை ஷாலு ஷம்மு அவர்களும் பொங்கல் உடையில் சாமி சாமி பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

சாமி சாமி பாடல் ஷாலு ஷம்மு நடனத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version