“வலிமை” படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ஷாலினி – ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு – வைரலாகும் வீடியோ.

அஜித் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் ஒரு வழியாக பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவந்து இத்துடன் 13 நாட்கள் ஆகின்றன படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் தற்போது பொதுமக்கள் இந்தப் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக பெண்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து ஆடுவது.

இந்த படத்திற்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது காரணம் இந்த படம் ஆக்சன் சீன்கள் அதிகமாக இருப்பதாலும் பெண்களுக்கு சென்டிமென்ட் சீன்கள் மற்றும் நல்ல கருத்தை கொடுப்பதால் கொண்டாடி வருகின்றனர். அதன் காரணமாகவே தற்போது திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நாளுக்குநாள் வலிமை படத்தின் வசூலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

வசூல் அதிகரிப்பதால் பல்வேறு டாப் நடிகர்களின் வசூலை முறியடித்து உள்ளது வலிமை. படம் வெளியான 10 நாட்களில் மட்டுமே 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததாக தகவல்கள் வெளிவந்தன தற்போது 13 நாட்களை கடந்து இருந்தாலும் வலிமை படத்திற்கான வரவேற்பு மட்டும் குறையாமல் இருக்கின்றன.

தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் படம் ரிலீசானது அதிலும் குறிப்பாக தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வசூல் ஜோராக வருகின்றது. இதனால் வசூலில் புதிய சாதனை படைக்க உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் படத்தை அவரது மனைவி மற்றும் அவரது தம்பி எனக் குடும்பமே பார்த்துவிடும் முதல் வாரத்திலேயே பார்த்து விடுவார்கள்.

ஆனால் வலிமை படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருப்பதால் நீண்ட நாட்கள் கழித்து ஒருவழியாக இப்பொழுதுதான் படத்தை பார்க்க  அஜித் குடும்பம் வந்தது. படத்தைப் பார்த்துவிட்டு அஜித் மனைவி ஷாலினி வெளியே வந்தார் அப்பொழுது ரசிகர்கள் பலரும் ஆரவாரத்துடன் கத்தினாள் அப்போதே ரசிகர் ஒருவர் “ஹாய் மேடம்” அஜித் சாரை கேட்டதாக கூறுங்கள் என்று சொன்ன வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

Leave a Comment