தமிழ் சினிமாவில் பல தம்பதிகள் இருந்தாலும் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வரும் தம்பதி என்றால் அது அஜித் ஷாலினி தான், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள்.
நடிகை ஷாலினி தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி ஆக அறிமுகமாகி பின்பு நடிகையாக நடித்து வந்தவர், இவர் நடிகர் அஜித்தை காதல் திருமணம் செய்துகொண்டார் இது அனைவருக்கும் தெரிந்ததுதான், நடிகை ஷாலினிக்கு ரிச்சர்ட் என்ற சகோதரர் இருக்கிறார்.

இவர் 2002-ம் ஆண்டு காதல் வைரஸ் என்ற தமிழ் திரைப் படத்தின் மூலம் ஹீரோவாக நடித்திருந்தார், இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இவர் அதன்பிறகு எத்தனை படங்களில் நடித்தாலும் இவரால் ஒரு வெற்றி நடிகராக வலம் வர முடியவில்லை.

2011ம் ஆண்டு அந்தமான் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு இப்பொழுதே திரவுபதி என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் தான் இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
