அஜித் படத்தை பார்த்துவிட்டு சுத்தமாக ஓடாது என்று கூறிய ஷாலினி. அதிர்ச்சியான இயக்குனர்.?

தமிழ் சினிமா உலகில் நடிகர், நடிகைகள் தனது பயணத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்கின்றனர் அந்த லிஸ்டில் இணைந்தவர்கள் தான் ஷாலினி – அஜித். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தின் பொழுது நடித்துக் கொண்டு இருக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின் ஷாலினி குடும்ப விஷயத்தில் இறங்கினார். இருப்பினும் திரைப்படங்களை அவ்வபொழுது திரையரங்குகளில் வந்து  படத்தை பார்ப்பது அவருக்கு ரொம்ப பிடிக்கும். படத்தை பார்த்த உடனேயே தனது கருத்தை தன்னுடன் இருக்கும் மற்றவர்களிடம் சொல்லி விடுவாராம் படம் நன்றாக இருக்கு இல்லை என ஒரே வார்த்தையில் சொல்லி விடுவது அவரது ஸ்டைலாக இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் கூட வலிமை திரைப்படத்தை ஒரு வாரம் கழித்துதான் நடிகை ஷாலினி படத்தைப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படம்  ஆக்சன், சென்டிமென்ட்  என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் வசூல் வேட்டை நடத்தியது ஆனால் கலவையான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப் படத்தில் கமிட்டாகி வருகிறார் அஜித் அந்த வகையில் மீண்டும் இயக்குனர் ஹச். வினோத்துடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக அதிரடியாக உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது இயக்குனரும், நடிகருமான பேரரசு அஜித் படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் சொன்னது நான் உதவி இயக்குனராக இருக்கும் பொழுது அஜித் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை ஷாலினி திரையரங்கில் பார்த்து விட்டு  வெளியே வந்த ஷாலினி அஜித் படம் ஓடாது என கூறியதாக தெரிவித்தார் அவர் சொன்னது போலவே அந்த படம் தோல்வியை தழுவியது.

Leave a Comment