அஜித் படத்தைப் பார்த்து இந்தப் படம்லாம் ஓடாது என வெளிப்படையாக கூறிய ஷாலினி.! உண்மையை உடைத்த இயக்குனர்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ஒருசில ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள் அதிலும் இந்த திரைப்படத்தின் கலவையான விமர்சனங்கள் வசூலில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

வலிமை திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது இந்நிலையில் மீண்டும் அஜீத் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அதேபோல் இந்த திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் அந்த வகையில் முக்கிய ஜோடியாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் ஷாலினி.

மேலும் சூர்யா-ஜோதிகா சினேகா-பிரசன்னா என பலரை கூறிக்கொண்டே போகலாம். அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஒன்றாக அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த பொழுது காதலிக்க ஆரம்பித்தார்கள் இந்த நிலையில் இரண்டாயிரமாண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணதிற்கு பிறகு படத்தில் முழுக்கு  போட்டுவிட்டு ஷாலினி குடும்பங்களை கவனித்து வருகிறார். இவருக்கு திரையரங்கில் படத்தை பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

அதிலும் இவர் படத்தை பார்த்த உடனே அந்த திரைப்படத்தை பற்றிய கருத்துக்களை உடனே கூறிவிடுவார் அந்த திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை ஒரே வார்த்தையில் சொல்லி விடும் பழக்கம் இவருக்கு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஷாலினி வலிமை திரைப்படத்தை தன்னுடைய தங்கை, மகள் ஆகியோருடன் பார்ப்பதற்கு திரையரங்கிற்கு சென்று உள்ளார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நிலையில் நடிகர் அஜித் திரைப்படம் குறித்து ஷாலினி கூறியதை இயக்குனர் பேரரசு தற்பொழுது கூறியுள்ளார்.

அதாவது நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பொழுது நடிகர் அஜித் திரைப்படத்தில் நடித்திருந்தார் அப்பொழுது அவரின் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு வந்த ஷாலினி இந்த படமெல்லாம் ஓடாது என வெளிப்படையாக கூறியுள்ளார் பின்னர் அவர் கூறியது போல் அந்த திரைப்படமும் மிகப்பெரிய தோல்வியை தழுவியது இந்தத் தகவலை இயக்குனர் பேரரசு அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ajith shalini news
ajith shalini news

Leave a Comment