டாடா படத்தை பார்க்க குடும்பத்துடன் வந்த ஷாலினி.! இணையத்தில் அனல் பறக்கும் வீடியோ…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார் இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க மிகத் தாமதமாக இருக்கும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வரும் நடிகை ஷாலினி அவர்கள் எந்த படங்கள் வெளியானாலும் அந்த படத்தை தனது குடும்பத்துடன் சென்று பார்த்து வருகிறார் அந்த வகையில் நேற்று வெளியான டாடா படத்தை பார்க்க நடிகை ஷாலினி அவர்கள் திரையரங்குக்கு சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் உருவாகியுள்ள டாடா திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் ஒரு மகனை தாயின் உதவி இல்லாமல் தந்தை எவ்வாறு வளர்க்கிறார் என்பது இந்த படத்தின் கருவாகும். அந்த வகையில் இந்த படம் நேற்று வெளியான உடனே இணையத்தில் இந்த படம் முழுக்க முழுக்க பரவியது.

இதை தொடர்ந்து இந்த திரைப்படத்தை பார்க்க தனது குடும்பத்துடன் சென்று உள்ளார் நடிகை ஷாலினி. அதை பலரும் வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

shalini
shalini

Leave a Comment