“அண்ணாத்த” படத்தை பார்த்த ஷாலினி மற்றும் குட்டி தல – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்ஷன் படங்களை கொடுத்து வந்த நிலையில் சிறுத்தை சிவாவுடன் முதல் முறையாக கைகோர்த்து அண்ணாத்த என்னும் படத்தில் கிராமத்து கதையில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு பலமாக இருந்தது.

ரசிகர்கள் மற்றும் மக்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் இந்த திரைப்படத்தை வேற லெவலில் எதிர்நோக்கியிருந்தனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ஆகியவை நல்லதொரு வரவேற்பு அனைவரது மத்தியிலும் எதிர் பார்ப்பை விதைத்து. அந்த காரணத்தினாலேயே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

அண்ணாத்த படத்தின் முதல் நாள் டிக்கெட் புக்கிங் மட்டுமே 20 கோடிக்கு மேல் அள்ளியது. மேலும் இந்தத் திரைப்படம்  தமிழகத்தில் மட்டுமே சுமார் 34.92 கோடியை அள்ளிய புதிய சாதனை படைக்கின்றது. போதாத குறைக்கு உலக அளவில் 70 கோடிக்கு மேல் கைப்பற்றிய பபுதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஓடி கொண்டிருந்தாலும் அண்ணாத்த படம் கலவையான விமர்சனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்று உள்ளது. இதனால் படக்குழு சற்று  வருத்தத்தில் தான் இருக்கிறது இருப்பினும் படத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினி இருப்பதால் இந்த படம் நிச்சயம் நீண்ட நாட்கள் ஓடும் என படக்குழு கணித்து உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தை ரசிகர்களும் தாண்டி சினிமா பிரபலங்களும் கண்டுகளித்து வருவதோடு தனது கருத்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று நடிகை ஷாலினி அஜீத் மற்றும் ஆத்விக் ஆகியோர் படத்தை பார்த்து என்ஜாய் செய்ததோடு மட்டுமல்லாமல் வெளியே வந்து ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் கசிந்துள்ளன.

Leave a Comment