“பீஸ்ட்” படத்தை பார்த்த ஷாலினி அஜித்குமார்.! எங்கு தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தொடர்ந்து  படங்களில் நடித்து வெற்றி மேல் வெற்றியை குதித்தவர்  நடிகைஷாலினி. இவர் மாதவனுடன் டும் டும் டும் , விஜயுடன் காதலுக்கு மரியாதை, அஜித்துடன் களம் என பல்வேறு படங்களில் நடித்து வெற்றி பெற்றவர் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் அஜித்துடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் தற்போது வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர் ஷாலினி சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் படங்களை பார்ப்பதை தவறுவது இல்லை அந்த வகையில் அஜீத் விஜய் என தொடங்கி இளம் நடிகர்கள் படங்கள் வகை பார்த்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அண்மையில் கூட அஜித்தின் வலிமை படத்தை பார்த்து கொண்டாடிய ஷாலினி தற்போது தனது மகளுடன் சத்யம் திரையரங்கில் சென்று தளபதி விஜயின் பீஸ்ட் படத்தையும் பார்த்து கொண்டாடி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பீஸ்ட் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நன்றாகவே தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஷாலினி பீஸ்ட் படத்தைப் பார்த்தது கொண்டாடினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இவர் திரையரங்கில் இருந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷாலினி மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கும் திரைப்படம் தான் அஜித்தின் 61 படம் தான். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து பிரகாஷ்ராஜ், அதிதி ராவ், யோகி பாபு மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்து வருவதாக தகவல்கள் உலா வருகின்றன.

Leave a Comment