முதன் முறையாக சமூக வலைதளத்தில் தலை காட்டிய ஷாலினி அஜித்.! அவர் பதிவிட்ட முதல் போஸ்ட் என்ன தெரியுமா.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வருபவர். இவர் சமூக வலைதள பக்கமாக பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைதளத்தின் பக்கத்திலும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதேபோல் சமூக வலைதளத்தில்  இல்லாத ஒரு மாஸ் நடிகர் என்றால் அது அஜித்தான்.

அஜித்  தன்னுடன் நடித்த ஷாலினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இன்று வரை மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி முதன் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணக்கை தொடங்கியுள்ளார்.

புதிய கணக்கை தொடங்கிய அவருக்கு 32,000 பேர் ஃபாலோஸ் இருக்கிறார்கள். இந்த நாளையில் அஜித்தின் மனைவி ஷாலினி சமீபத்தில் தன்னுடைய திருமண நாளை கொண்டாடிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷாலினி அஜித் தனது முதல் போஸ்டரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

அப்படி இருக்கும் நிலையில் இனி அஜித் நடிக்க இருக்கும் திரைப்படங்கள் அஜித்தின் பயணங்கள் குறித்து ஷாலினி தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் முடிவடைந்த நிலையில் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் ஷாலினி வெளியிட்ட புகைப்படத்திற்கு கீழே துணிவு அப்டேட் கேட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ajith shalini
ajith shalini

Leave a Comment