படையப்பா திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது ஷாலினி அஜித்தா.? இணையத்தில் வெளியான அதிரடி தகவல்.?

தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு நல்ல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் கல்லா கட்டும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் போதும் அந்த அளவிற்கு கூட்டம் கூடிவிடும் என்று தான் கூற வேண்டும்.

மேலும் ரஜினி நடிப்பில் தற்பொழுது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா,குஷ்பு, கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பரிச்சயமான நடிகைகள் நடித்துள்ளார்கள் இதனாலேயே இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்குநாள் தூண்டுகிறது.

மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா இதில் ரஜினிகாந்த் மிகவும் அட்டகாசமாக நடிக்க ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி,சௌந்தர்யா,லக்ஷ்மி,நாசர்,ராதாரவி போன்ற ஒரு திரைப்பட்டாளமே நடித்திருக்கும்.

இதில் எவ்வளவுக்கு எவ்வளவு ரஜினியின் நடிப்பு பாராட்டப்பட்டதோ அதேபோல் இந்த திரைப்படத்தில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பல சினிமா பிரபலங்களும் பாராட்டினார்கள் நீலாம்பரி கதாபாத்திரம் என்றால் குடும்பப் பெண்களுக்கு உடனே ஞாபகம் வருவது ரம்யா கிருஷ்ணன் தான்.

மேலும் இந்த திரைப்படத்தில் குறிப்பாக ரஜினிக்கு தங்கையாக நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கியவர் தான் சித்ரா இவர் நடித்த கதாபாத்திரத்தில் ஷாலினி அஜித் தான் முதலில் நடிக்க இருந்தாராம் ஆனால் ஒருசில காரணங்கள் குறித்து இந்த திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லையாம்.

shalini6
shalini6

ஆனால் ஷாலினி ரஜினியின் ராஜா சின்ன ரோஜா என்ற திரைப்படத்தில் சிறுவயதிலேயே நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று மேலும் இந்த தகவலை அறிந்த ஷாலினி ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் இவர் நடித்திருந்தால் வேற லெவலில் தான் இருந்திருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment