சினிமாவிற்கு அறிமுகமாகி சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்து பெரிதாக நடித்த திரைப்படங்கள் பிரபலத்தை தராத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இது வேலைக்காகாது என்று பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர்.
இவர் நினைத்ததுபோலவே இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் இவருக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் கிடைத்தது. இதன்மூலம் தற்பொழுது தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்திலும், கதாநாயகியாகவும் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு இவர் திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்தாலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதோடு இவர் சமீப காலங்களாக வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியில் எல்லை மீறி இருப்பதால் ஏராளமான ரசிகர்கள் இவரை பங்கமாக திட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் தற்போது வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
