பொதுவாக சமூக வலை தளமான யூடியூப் பலருக்கு பொழுதுபோக்காக அமைந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு வருமானம் ஈட்ட யூட்யூபில் வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வருமானத்தை ஈட்டி வருகிறார்கள் அப்படி யூடியூப் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் மதன் கௌரி.
இவர் பல சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். அதேபோல் மதன் கௌரி எப்பொழுது வீடியோ போடுவார் என பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த அளவு மிகவும் பிரபலமாகிவிட்டார். வெளிநாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை நமக்கு புரியவைக்கும் வகையில் எளிதாக தமிழில் கூறுவார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் நடக்கும் பல சமூகப் பிரச்சினைகளையும் இவர் முன்வைக்கிறார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு வீடியோ போடுவதால் தான் இவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் அதேபோல் மாதத்திற்கு பல லட்சங்கள் சம்பாதிக்கும் இவர் குறித்து ஷகிலா அவர்கள் மேடையிலேயே ஒரு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஷகிலா அவர்கள் கூறியதாவது உச்சம் திரைப்படத்திற்கான ஆடியோ விழாவிற்கு சென்று இருந்தார் அப்போது அவர் பேசியதாவது ‘உச்சம் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கு மிச்சம்’ இந்த திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது சமுதாயத்தில் நிலவும் பல கொடுமைகளை அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர். ரேப்பிஸ்டுகளுக்கு வெளிநாடுகளில் கொடுமையான முறையில் தண்டனை கொடுக்கிறார்கள்.
இந்த தண்டனை குறித்து நானும் பலமுறை பேசியுள்ளேன் யூடியூபில் மதன் கௌரி போன்ற பிரபலங்கள் சொல்வதை விட்டுவிட்டு திரையரங்கில் சென்று படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும் மதன் கௌரி கௌரி இந்த கௌரி என்று சொல்வதை கேட்பதை விட்டுவிட்டு இது போன்ற படத்தை கண்டிப்பாக பாருங்கள் என கூறியுள்ளார்.