ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ.! ட்ரைலரே இவ்வளவு மோசமா இருக்கே

0

மலையாள நடிகை சகிலா 1990 களில் அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் சகிலா.  இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர் திரைப்படம் வெளியானால் முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு சவாலாக அமைந்திருந்தது.

அதுமட்டுமில்லாமல் வசூலிலும் கல்லா கட்டியது, அந்த காலத்திலேயே தன்னுடைய குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்பட்டார்.  சினிமாவில் உள்ளவர்களே ஷகிலாவின் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள்.  அப்படி சகிலாவின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் திரைப்படமாக மாற்றியுள்ளார் கன்னட இயக்குனர் இந்திரஜித் லோகேஷ்.

இந்த திரைப்படத்தில் ரிச்சா சத்தா,  பங்கஜ் திரிபாதி,  எஸ்தர் நோ ரங்கா,  ராஜீவ் பிள்ளை,  ஷிவா ராணா, காஜல் சக்,  சந்தீப் மலாணி,  என பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.  படத்தை சிம்மி நன்வானி சரவண பிரசாத் அவர்கள் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.

இந்த திரைப்படம் கேரளாவைப் போல் இருக்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் உள்ள தீர்த்தஹல்லி என்ற பகுதியில் சில காட்சிகளை படமாக்கிய படக்குழு. மேலும் படத்தை பெரும்பகுதியை பெங்களூருவின் இன்னோவேடிவ் பிலிம் சிட்டியில் படமாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்மஸ் அன்று வெளியாக இருக்கிறது. அதேபோல் மலையாள பதிப்பு கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஷகிலா திரைப் படத்திற்கு ‘A’ சான்றிதழ் கிடைத்தது தணிக்கை குழுவினர் படத்தை பாராட்டியுள்ளார்கள்.