ஷகீலாவின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கபோவது நம்ம அஜித் பட நடிகையா..?

shakeela
shakeela

மலையாள சினிமாவின் மூலமாக தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் நடிகை ஷகிலா.  இவர் தன்னுடைய நடிப்பு மற்றும் அழகின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டியது மட்டுமல்லாமல் இவர் நடித்த காலகட்டத்தில் இவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்.

இவ்வாறு இவர் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மலையாள திரைப்படங்கள் தான் இவர் மலையாள திரைப்படத்தில் தான் எப்படி இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என அவர் பல பேட்டிகளில் புலம்பி தள்ளி உள்ளார்.

இவ்வாறு நடிகை ஷகிலா இது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய குடும்ப வறுமை தான் காரணம் ஆகையால் தான் அவர் மலையாளத்தில் இதுபோன்ற மோசமான திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என அவரே கூறியுள்ளார்

ஆனால் இதுபோன்ற திரைப்படத்தில் நடித்ததன் பிறகாக ஒரு நேரத்தில் அவருடைய மார்க்கெட் முற்றிலும் சரிந்துவிட்டது பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தவித்து வந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாறை தற்போது படமாக எடுக்க முன் வந்துள்ளார்கள்.

அந்த வகையில் இவர் எப்படி இது போன்று ஆனார் இவ்வாறு மோசமான திரைப்படங்களில் இவர் நடிப்பதற்கு காரணம் என்ன என்பதை அடிப்படையாக வைத்து இந்த கதையை உருவாக்கி வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தை ஷகிலாவே தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஷகிலா போல இருந்தால் நல்ல வெற்றி கிடைக்கும் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஹுமோ குரோஷி அவர்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஷகிலா என்ற ஒரு திரைப்படம் வெளியாகியது.  இந்நிலையில் இவர் சமீபத்தில் கூட பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் மீது இருந்த கேவலமான பெயரை மாற்ற அயராது போராடினார்.

huma kuroshi
huma kuroshi