கோடியை கையில் கட்டிக்கொண்டு மாசாக வலம் வரும் ஷாருக்கான்.! வாட்ச்சியின் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கோடிக்கணக்கில் வசூல் செய்து வருகிறது. இந்தியாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக ஷாருக்கான் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது உலக அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் யாஷ் ராஜ் தயாரிப்பில் சித்தார்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சால்மன் கான், ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், ஜான் ஆபிராம் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது வரையிலும் உலக அளவில் 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது. ஏராளமான சர்ச்சைகளுக்கு நடுவில் உருவான இந்தப் படம் வெளியாகுமா? என்ற கேள்விக்குறி இருந்து வந்த நிலையில் பல தடைகளுக்குப் பிறகு வெளியாகி தற்பொழுது மிகப்பெரிய வெற்றியினை பெற்றுள்ளது.

அந்த வகையில் பதான் திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோ தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் நிறுவனம் தாங்கள் காலையில் செய்யும் தோல் பராமரிப்பு குறித்து பேசி இருந்தனர் அப்படி பேசுகையில் ஷாருக்கான் வெள்ளை நிற சட்டை மற்றும் நீல நிற வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார்.

SHARU KHAN 1
SHARU KHAN 1

இந்நிலையில் அந்த கடிகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது எனவே ஷாருக்கான் ரசிகர்கள் அந்த கடிகாரத்தைப் பற்றி மிகவும் ஆர்வமாக இணையதளத்தில் தேடி வந்த நிலையில் அந்த கடிகாரத்தின் விலையை பார்த்து வாயடைத்து போய் உள்ளனர். ஆம், அந்த கடிகாரம் பேஷன் பிளாக்கர் சப்பாய்விடம் கேட்டனர் அதற்கு அவர் கூறுகையில் இந்த கடிகாரம் ராயல் ஓக் பெர்பெக்ச்சுவல் காலண்டர் வாட்ச் என்றும் இதனுடைய மதிப்பு 4.98 கோடி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment