பாலிவுட் சினிமாவில் கிங்காங் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். ஹிந்தி சினிமாவின் மூலம் அறிமுகமாகி பின் அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு மார்கெட்டை வைத்திருப்பவர் ஷாருக்கான். தற்போது தமிழ் இயக்குனரான அட்லி உடன் முதன்முறையாக கைகோர்த்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் கைகோர்த்துள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷாருக்கான் தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தமிழில் ஹே ராம், உயிரே, அசோகா போன்ற பல படங்களில் நடித்து அசத்தியவர்.
கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை சூப்பராக கொடுப்பதால் இன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த நாயகனாக இருக்கிறார். சினிமாவையும் தாண்டி ஷாருக்கான் பல விளம்பரப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார் இதன் மூலமும் நல்லவே காசு பார்த்து வருகிறார். நடிகர் ஷாருக்கான்னு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அண்மையில் அவரது மகன் நண்பர்களுடன் போதை பொருள் விவகாரத்தில் மாட்டி போலீசாரால் கைது செய்யபட்டார்.
இச்செய்தி மிகப்பெரிய அளவில் விஸ்வரூபமாக தற்போது மாறியுள்ளது தனது பையனை காப்பாற்ற ஷாருக்கான் தற்போது போராடி வருகிறார் இந்த நிலையில் பல விளம்பர படங்களில் கைகோர்த்து இருந்த ஷாருக்கான். பல நிறுவனங்கள் இந்த பிரச்சினையின் காரணமாக வெளியேறி உள்ளது அதில் முக்கியமானது பைஜூஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆகி விளம்பரங்களில் நடித்து வந்தார்.
இதன் மூலம் ஆண்டுக்கு 3 லிருந்து 4 கோடி வரை சம்பளமாக வழங்கப் பட்டு இருந்தது தற்போது இந்த பிரச்சினையை கண்ட பைஜூஸ் நிறுவனம் ஒப்பந்தம் வேண்டாமென அதிலிருந்து விலகி உள்ளது இதனால் ஷாருக்கானுக்கு பல கோடி லாஸ் என கூறப்படுகிறது.