ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனதால் கடுப்பான ஷாருக்கான்.! பதட்டத்தில் அட்லி…

இயக்குனர் அட்லியின் முதல் படம் ராஜா ராணி இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பேரவே அடுத்ததாக இயக்குனர் அட்லி அவர்கள் நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படத்தை இயக்கினார்.

அந்த வகையில் இவர் இயக்கிய மெர்சல், பிகில், தெறி, ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த மூன்று படமும் தொடர்ந்து ஹார்ட்ரிக் வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து மூன்று படங்களை வெற்றி படமாக கொடுத்து தமிழில் கலக்கி கொண்டு இருந்த அட்லி தற்போது பாலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறார்.

பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார் அட்லி இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

இதற்கு இடையில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வேற ஆயிரம் கோடியை தாண்டி இருக்கிறது இதனால் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கிறது அதுமட்டுமல்லாமல் பாதன் திரைப்படத்தின் வசூலை ஜவான் திரைப்படம் முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி, என பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜவான் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகாமல் தேதியை மாற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், உள்ளிட்ட பலமொழிகளில் ஜவான் திரைப்படம் ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது ஜவான் படத்தின் இறுதி கட்டப்பணிகள் மிக விறுவிறுப்பாக மும்பையில் நடந்து கொண்டு வரும் நிலையில் படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்க கால தாமதம் ஆகுவதால் இந்த படத்தை வெளியிடுவதில் கொஞ்சம் சிக்கலாக இருக்கிறதாக கூறப்படுகின்றது அது மட்டுமல்லாமல் அட்லி இந்த படத்தின் எடிட்டை நிதானமாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது பட குழு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் ஜவான் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க முதலில் நடிகர் அல்லு அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பாபு 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருவதால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு தற்போது கே ஜி எஃப் படத்தில் அதிரவாக மிரட்டிய சஞ்சய் தத்தை இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

விரைவில் ஜவான்  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் அப்டேட்கள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment