ஷாருக்கான் – அட்லீ இணைந்துள்ள புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா.. லயன் கிடையாது.?

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து  சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. குறிப்பாக இவர் விஜய்யை வைத்து இயக்கிய படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்துள்ளன. தெறி, பிகில், மெர்சல் ஆகிய படங்கள் அடங்கும் இந்தித் திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம்.

செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் அட்லீ திடீரென ஹிந்தி பக்கம் தாவினார். ஷாருக்கான்னிடம் ஒரு சூப்பரான கதையை கூற அது பிடித்துப்போகவே தற்போது படமாக உருவாகியுள்ளது இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி மல்கோத்ரா மற்றும் பல ஜாம்பவான்கள் நடித்து உள்ளனர்.

இந்த படத்தில் ஷாருக்கான் அப்பா – மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக முடிந்து தற்போது அடுத்த கட்ட வேலை யை நோக்கி நகர்ந்துள்ளது குறிப்பாக டிரைலரை வெளியிடுவதற்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது படக்குழு.

இந்த படத்திற்கு முதலில் லயன் என பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி பார்க்கையில் இந்த படத்திற்கு வேறு ஒரு பெயரை படக்குழு  வைத்துள்ளதாக கூறப்படுகிறது அட்லீ – ஷாருக்கான் இணைந்துள்ள இந்த படத்தின் பெயர் ஜவான் என கூறப்படுகிறது. படக்குழுவே இதை அதிரடியாக அறிவித்துள்ளது அதன் புகைப்படம் கூட தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ட்ரெய்லர் வந்தால் அதுவும் உறுதியாகிவிடும் ட்ரைலர் நிச்சயம் வேற லெவல் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெற்றியடையும் பட்சத்தில் ஹிந்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வார் இயக்குனர் அட்லீ. அதன்பின் தமிழ் பக்கம் திசை திரும்ப வரா என்பதுதான் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியே..

 

Leave a Comment